#HearMeOut
Skip Navigation Links
Home
Profile
Latest
Search
Social Media
Guide
24 Aug 2023
(241 Views)
[x]
Presidential Elec 2023 - T
நான் 2023-ஆண்டு அதிபர் தேர்தலில் வேட்பாளரானதற்கு விதியே காரணம்.
ஏன் என விளக்குகிறேன்.
2011-ஆம் ஆண்டில் அரசமைப்புச் சட்டம் வரையறை செய்தது தனியார் துறை சார்ந்த வேட்பாளர் கடந்த 15 ஆண்டுகளுக்குள் தேவையான தகுதிகளை பெற்றித்தல் வேண்டும் என்பது. நான் என்.டி.யு.சி இன்க்கமிலிருந்து 2007-ல் வெளியாகி 2011-ல், அதாவது 4 ஆண்டுகளுக்குப் பிறகு தேவையான தகுதிகளை பெற்றிருந்தேன்.
எனக்கு ஆச்சரியம், அந்த தகுதிகளுக்கான கால வரையறை 15-ல் இருந்து 20 ஆண்டுகளானது. ஏன் அரசாங்கமும் நாடாளுமன்றமும் அந்த கால வரையறையை நீட்டிக்க வேண்டும் என விடை தேடினேன், விடை கிடைக்கவில்லை. எனக்கும் வியப்பாக உள்ளது.
இந்த வரையறை 20 ஆண்டுகளானதால், நான் மீண்டும் தகுதி பெற்றேன்.
தேர்தலுக்கு தகுதி பெற்றேன் என்றாலும், தொடக்கத்தில் போட்டியிலிருந்து விலகி இருக்கவே நான் விரும்பினேன். பல நண்பர்கள் என்னை முன்வந்து அளும் கட்சியை சாராத சுயட்சையான வேட்பாளருக்கு வாக்களிக்கும் வாய்ப்பை மக்களுக்கு வழங்க வேண்டும் என ஊக்கமூட்டினர்.
ஜார்ஜ் கோ தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த போது, நான் போட்டியிலிருந்து விலகி அவரே ஆளும் கட்சியிடம் இருந்து சுயட்சையானவர் என்ற சிறப்புக்கு ஆக தகுதி வாய்ந்தவர் என வழிவிட்டு மகிழ்ச்சி கொண்டிருப்பேன். ஜார்ஜ் கோ அனேகமாக தகுதிச் சான்றிதழ் பெறமாட்டார் என்ற நிலையிலேயே நான் தகுதிச் சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்தேன். அதுவே சரியான கணிப்பானது.
எனவே நான் சுயட்சையான அதிபருக்குரிய தகுதியை நிலைநாட்டுவேன் என்பதால் நான் முன்வந்தேன், விதி தீர்மானம் செய்ததன் காரணமாக.
இந்த தேர்தலுக்கான போட்டியில் நான் பல கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அவற்றை நான் இன்னொரு ஊடக அறிக்கை வழியாக சில நாட்களுக்குள் தெரிவிக்கின்றேன்.
இன்று காலை 10 மணி ஊடக அறிக்கையில், நான் திட்டமிட்டுள்ள தேர்தல் பிரச்சாரம் தொடர்பான தகவல்களை அறிவிப்பேன். அன்புகூர்ந்து வருகை தரவும்.
முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பின் போது, எனது உரையிலிருந்து பின்வரும் வாசகங்கள் அதிபரின் அதிகாரங்களுககு உட்படவில்லை என அரசாங்கத்தின் ஊடக வாரியம் கூறியது. அவை,
நான் முழுமையாக முதலீட்டு யுக்தியை முதலீட்டு நிபுணர்களிடம் விரும்பிய நோக்கத்தை எட்டும் வழிமுறைகள் குறித்து விவரிப்பேன்.
அதை கண்காணிக்கும் பொறுப்பு இயக்குனர்கள் குழுவிடம் இருக்கும், ஆனால் அவர்களின் அணுகுமுறைக்கான என் ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் நான் வழங்குவேன்.
அரசமைப்புச் சட்டத்திற்கு அப்பால், எனக்கு ஒரு முன்னோக்கிய பார்வை உள்ளது - அதிபர் அலுவலகத்தை சிங்கப்பூர் மக்களுக்கு மேலும் சிறந்த வாழ்க்கை முறையை உருவாக்கும்படி கொள்கைகளை வகுக்க வழிகாட்டுதல். நான் மூன்று அடிப்படை அம்சங்களில் கவனம் செலுத்துவேன், அவை நம் குடிமக்களுக்கு முக்கியமானவை: வாழ்க்கை செலவுகளை குறைப்பது, கட்டுப்படியான செலவில் வீடமைப்பு, மற்றும் வேலை வாய்ப்புகள் போதுமானதாகவும் நிலைத்தன்மை கொண்டதாகவும், முன்னேற்றத்திற்கான வழிகாட்டும்படியும் அமைதல்.
இதில் என் கருத்து, இந்த வாசகங்கள் எனது உரையின் ஆக முக்கியமான பகுதிகள் என்பதோடு அரசாங்க ஊடக ஆணையம் அரசமைப்புச் சட்டத்தை குறுகிய கண்ணோட்டம் கொண்டு அணுகியதும் முன் கூறிய வாசகங்களை அகற்றும்படி கேட்டதும் அவர்கள் அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல. அவர்கள் அகற்றும்படி கூறியது தொடர்பாக விவாதிக்க எனக்கு நேரமில்லை. அதை தனியாக அரசாங்க ஊடக ஆணையத்திடம் கொண்டு செல்வேன்.
சிலர் நான் மக்களை தவறாக இட்டுச் செல்வதாகவும் என் அதிகாரத்தில் நிறைவு செய்யமுடியாத வாக்குறுதிகளை வழங்குவதாகவும் கூறினர். எனது அறிக்கைகள் வழி நான் தெளிவுபடுத்திவிட்டேன், எனது அதிபர் அலுவலகத்தின் மூலம் மக்களின் துயரங்களையும் அவர்கள் கொண்டுள்ள நோக்கங்களையும் அரசாங்கத்திடம் தெரிவிப்பேன் என்று.
நான் இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளேன், நான் பிரதமரையும் மற்ற அமைச்சர்களையும் அவர்கள் கொண்டுள்ள சில கொள்கைகளை சிறிதளவு மாற்றம் செய்து மக்களுக்கு மேலும் பலனளிக்கும்படி செய்வேன் என்று.
தொடக்கமாக, நான் உடனே 2024-ல் தொடங்கவுள்ள 1% பொருள் சேவை வரி உயர்வை தள்ளிப்போடும் படி பரிந்துரை கூறுவேன். எனக்கு தெரியும் அவர்கள் அந்த வரி உயர்வை மேற்கொள்ள போவதாக அறிவித்துள்ளார்கள் என்று. அவர்களை மறுபரிசீலனை செய்யும்படி பரிந்துரைப்பேன். நான் இதில் அரசியல் போக்காக செயல்படவில்லை. நான் பெரும்பான்மை மக்களின் கருத்தை தெரிவிக்கின்றேன். அவர்களது குரல் நிராகரிக்கப்படக் கூடாது.
எனக்குத் தெரியும், நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இப்படிப்பட்ட கருத்துக்களை தனிப்பட்ட முறையில் எனது வழக்கமான கருத்து பரிமாற்ற நிகழ்வுகள் வழி நான் பிரதமருக்கு தெரியப்படுத்துவேன். இதை நான் பின்பற்றுவேன் என நான் உறுதியளிக்கின்றேன்.
அதிமான மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என நான் நம்புகிறேன், இப்படிப்பட்ட அம்சங்களில் எனக்கு செயலாக்க அதிகாரம் இல்லை என தெரிந்த போதிலும். அவர்கள் எனக்கு வாக்களிப்பார்கள், என்னால் முடிந்ததை செய்ய, எனது முன்னோக்கிய பார்வை கண்முனே கொண்டு வருவதோடு முக்கிய மூன்று நோக்கங்களையும் அடைவதற்கு.
Tan Kin Lian
View PDF
Add Comment
Add a comment
Email
Comment
QR Code